" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வருகிற 14-ஆம் தேதி நகராட்சியை கண்டித்து முழு கடை அடைப்பு போராட்டம்
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட ஹோட்டல். ஜவுளிக்கடை. பேன்சி ஸ்டோர் திருமண மண்டபம். வாழைமண்டி. தேங்காய் மண்டி .மளிகை கடை பெட்டிக்கடை என உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரம் நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளது இந்த கடைகளுக்கு நான்காண்டுகளாக வரிவசூல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் தற்போது ஒரே நேரத்தில் குப்பைவரி. குழாய் வரி சொத்துவரி .தொழில்வரி . பாதாளசாக்கடை திட்ட வரி. என நான்கு வரிகளும் ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் என்று நகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வணிகர்கள் நகராட்சி ஆணையரிடம் தனித்தனியாக வரி கட்டுகிறேம் என் தெரிவித்து உள்ளனர் ஆனால் நகராட்சி ஊழியர்கள் கடைகளிள் வலுக்கட்டாயமாக மிரட்டும் தோணியில் வரி வசூலில் ஈடுபட்டு உள்ளனர் இதனைக் கண்டிக்கும் விதமாக திருவண்ணாமலை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து நகராட்சி பெண் ஊழியர்களை கொண்டு அடாவடி வசூலை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் நகராட்சிக்கு கட்ட வேண்டிய வரியை தவணை முறையில் கட்டுகிறோம் என்று பலமுறை தெரிவித்தும் நகராட்சி ஊழியர்கள் எங்களை வியாபாரிகள் என்றும் பார்க்காமல் நகராட்சி ஊழியர்கள் மரியாதை தராமல் மிரட்டும் தோணியில் ஜேசிபி வாகனங்களை கொண்டுவந்து நீங்க வரி வரி கட்டவில்லை என்றால் படையை இடித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர் இந்த அராஜக போக்கை கண்டித்து வரும் 14ம் விக்கிரமராஜா தலைமையில் திருவண்ணாமலை நகரில் முழு கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக திருவண்ணாமலை வியாபார சங்கத் தலைவர் தனகோட்டி தெரிவித்தார்