பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:

" alt="" aria-hidden="true" />


பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:


 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரதராஜ் நகர் உள்ளன .


இந்த பகுதியில் சில ஆண்டுகளாக பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


 கோபி வயது 50, பாண்டியம்மாள் வயது 45 ,நிவேதா வயது 17 ,ரவி வயது 20, ஆகியோர் பட்டாசு தொழிலில் ஒரே குடும்பத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இன்று  காலை சுமார் 11 30 அளவில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டன இந்த தீ விபத்தில் கோபி மனைவி பாண்டியம்மாள் கோபி மகள் நிவேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


 இந்த தீ விபத்தினால் அருகிலிருந்த மூன்று வீடுகள் இடிந்து நொறுங்கி போனது


 இந்த சம்பவம் தகவலறிந்து பெரியகுளம் தீயணைப்பு துறையினர் வருகை தந்து தீயை அணைத்து போராடி வருகின்றனர்.


 மேலும் பொருள் சேதம்  ஏற்படாமல் இருக்க சுற்றுப்பகுதியில் பரவும் தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர். 


 இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.


 இந்த தீ விபத்து பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.